அண்மையில் நடந்த சாத்தான்குளம் சம்பவம் தமிழக காவல்துறைக்கு கறைபடிந்த சம்பவமாக மாறிவிட்டது. விசாரணைக்காக அழைத்துச் சென்று தந்தை, மகன் கொடும் சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மேலும் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து சிபிசிஐடி மூலம் குற்றவாளிகளை கைது செய்து வழக்கின் சாராம்சத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதையடுத்து காவலர்கள் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம், இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் உட்பட காவலர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் நிலையத்திற்கு வரக்கூடாது என்று தடை விதித்து அம்மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 650 பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.