பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய காமக் கொடூர தந்தை சிறுமியின் வேதனை பதில்! அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

Photo of author

By Sakthi

விக்ரவாண்டி அடுத்திருக்கின்ற வி.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு உண்டானது. உறவினர்கள் சிறுமியை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தார்கள். சிறுமியிடம் கணவர் தொடர்பான விவரங்களை மருத்துவமனை ஊழியர்கள் கேட்டபோது தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். அந்த தகவலினடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்தபோது தாய் மரணமடைந்து விட்டதால் தந்தையான கோவிந்தனுடன் 10ம் வகுப்பு முடித்துவிட்டு வசித்து வருவதாகவும்,

கட்டிட கூலித் தொழிலாளியான தன்னுடைய தந்தைக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும், இதன் காரணமாக, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு கடந்த வருடம் தன்னுடைய தந்தை குடிபோதையில் அவருடைய நண்பரான முனுசாமி என்பவருடன் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அதன் காரணமாகவே தான் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் இதனை வெளியே தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டி வந்ததாகவும் காவல்துறையினரிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய புகாரினடிப்படையில் அவருடைய தந்தை கோவிந்தன் மற்றும் அவருடைய நண்பர் முனுசாமி உள்ளிட்ட 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

பெற்ற தந்தையே தன்னுடைய நண்பருடன் சேர்ந்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.