விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற ஒட்டநந்தல் கிராமத்திற்கு அருகில் இருக்கும் காலனி பகுதியை சார்ந்தவர்கள் விதிமுறைகளை மீறி திருவிழா நடத்திய காரணத்தால் ஆங்காங்கே நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இவர்கள் திருவிழாவை நடத்தி விட்டுச் செல்லட்டும் என பொருத்து இருந்தாலும் அவர்கள் எல்லோரும் அத்தியாவசிய மற்றும் மற்ற பொருட்களை வாங்குவதற்கு ஒட்டநத்தல் கிராமத்திற்கு வர வேண்டிய சூழலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்த மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் அனைவரும் விரைவாக வந்து விசாரணை செய்து திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த பகுதியைச் சார்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். அதோடு இசைக் கச்சேரியை நடத்திய உபகாரணத்தையும் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இதற்குப் பின்னரும் கூட அந்த தரப்பினர் திருவிழாவை வேறொரு ஆடலும் பாடலும் குழுவுடன் நடத்தினார்கள்.
ஆகவே இந்த விவகாரம் காவல் துறையின் கவனத்திற்கு செல்லவே அவர்கள் மறுபடியும் வந்து எச்சரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஊர் பெரியவர்கள் மற்றும் ஒரு தரப்பினரின் பகுதிக்கு சென்று அவர்களே பஞ்சாயத்தைக் கூட்டி காவல்நிலையத்தில் பதிவு செய்திருக்கின்ற வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதோடு எங்களுடைய ஊர்க்காரர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என அவர்களே காலில் விழுந்து இருக்கிறார்கள்.
அத்துடன் இந்த காலில் விழுந்த விவகாரத்தை மட்டுமே காணொளி எடுத்து வைத்துக் கொண்ட ஒரு சிலர் இணையதளங்களில் ஆதிக்க சாதியின் அட்டகாசம் தாழ்த்தப்பட்டோரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த கொடூரம் என வதந்தியை பரப்பி இருக்கிறார்கள். உண்மையை சரியாக தெரிந்து கொள்ளாத பல ஊடகங்களும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அநீதி இழைக்கப்படுகிறது என்று தெரிவித்து போலியான செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். சில ஊடகங்கள் வேண்டுமென்றே தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
அதோடு பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மீது பொய்யான வழக்கு கொடுத்து 59 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஊரில் ஒருவரை கூட விட்டு வைக்க மாட்டோம் எல்லோரையும் வெட்டி சாய்ப்போம் என்றெல்லாம் அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நயவஞ்சகமாக காலில் விழுந்து அடாவடி செய்து இருக்கிறார்கள். இது குறித்த உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வன்னியர் சமூகத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் பாலு பதிவு செய்திருக்கின்ற வலைதள பதிவில் இன்றைய தினம் காலை 10 மணி அளவில் ஒட்டனந்தல் கிராமத்திற்கு செல்லவிருக்கிறேன். விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் அப்பாவி வன்னியர்கள் சதிவலையில் சிக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள் அது குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக வழக்கறிஞர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்று அங்கு ஆய்வு நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.