நடிகர் விமலின் மனைவி தேர்தலில் போட்டி

Photo of author

By Anand

நடிகர் விமலின் மனைவி தேர்தலில் போட்டி

Anand

நடிகர் விமலின் மனைவி தேர்தலில் போட்டி

களவானி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரபல நடிகர் விமல். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அக்‌ஷயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விமலின் மனைவி அக்‌ஷயா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் அக்‌ஷயா.

விமலும் அவரது மனைவி அக்‌ஷயாவும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். அக்‌ஷயாவுக்கு திமுக சார்பில் சீட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.