விநாயகர் சதுர்த்தியில் பிள்ளையாரின் அருள் முழுமையாக கிடைக்க இப்படி பூஜை செய்யுங்கள்!!

பக்தர்களின் தடைகளை தகர்த்து மகிழ்ச்சி மற்றும் வளமையை கொடுக்கும் விநாயகப் பெருமான் பிறந்த தினத்தை விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகின்றோம்.இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 07 அன்று கொண்டாடப்பட உள்ளது.

களிமண்ணால் செய்து வண்ணம் பூசிய விநாயகரை வீட்டிற்கு அழைத்து வந்து சிறப்பாக பூஜை செய்து ஒற்றைப்படை தினத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதை இந்து மக்கள் விநாயகர் சதுர்த்தி நாளாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நன்னாளில் இந்து மக்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்து நீராடி புத்தாடை அணிந்து விநாயகரை வழிபடுவது வழக்கம்.களிமண் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் விநாயகரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று மதிய நேரத்தில் ஒரு மணிக்குள்ளாக விநாயகர் வழிபட்டை நிறைவு செய்திருக்க வேண்டும்.மதியம் ஒன்றரை மணியில் இருந்து மூன்று மணி வரை எமகண்டம் என்பதனால் ஒரு மணிக்கு முன்னரே விநாயகருக்கு பூஜை செய்வது நல்லது.

விநாயகருக்கு பூஜை செய்வது எப்படி?

பூஜை அறையை சுத்தம் செய்து விநாயகர் சிலையை வைக்கவும்.பின்னர் பூக்களால் அவரை அலங்கரிக்கவும்.அதன் பிறகு ஒரு வாழை இலையில் வெற்றிலை,பாக்கு,வாழைப்பழம் வைக்க வேண்டும்.

பிறகு விநாயகருக்கு உகந்த நெய்வேத்தியமான பூரணம்,பொங்கல்,சுண்டல்,கொழுக்கட்டை,தேன்,அவல்,லட்டு போன்றவற்றை வாழை இலையில் வைக்கலாம்.அதன் பிறகு கொய்யா,விளாம்பழம்,மாதுளை போன்ற கனிகளை வைக்கலாம்.

விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை மற்றும் அருகம்புல் மாலை என்றால் அதீத இஷ்டம்.இந்த மாலைகளை அவருக்கு சூட்டி மனமுருக பூஜை செய்தால் வாழ்வில் ஏற்பட்ட தடை நீங்கி வெற்றியும்,வளமும் கிடைக்கும்.