இதுதான்யா கேப்டன்… சேதுபதி IPS படத்தின் போது விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… வைரலாகும் புகைப்படம்

Photo of author

By Vinoth

நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் எப்போதும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோக்களில் விஜயகாந்துக்கு எப்போதும் தனியிடம் உண்டு. 80 கள் மற்றும் 90 களில் பல ஆக்‌ஷன் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கியவர். அவர் படங்களில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் விதமாக பார்த்துக்கொள்வார்.

அப்படி 1994 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் அவரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த படத்தில் விஜயகாந்தோடு மீனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி வாசு இயக்க ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.

அந்த படத்தின் தொடக்கத்தில் வரும் கடிகாரத்தில் நடக்கும் ஸ்டண்ட் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. மிகப்பிரம்மாண்டமான கடிகாரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் காட்சி அது.

அந்த காட்சியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இப்போது ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் குகனின் மகள் அருணா பகிர்ந்துள்ளார். அந்த காட்சிக்காக விஜயகாந்த் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ரிஸ்க் எடுத்து கடிகாரத்தில் ஏறி நடித்ததாக தெரிவித்துள்ள அருணா. அது சம்மந்தமான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.