மகராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டில் அத்துமீற முயன்றதாக செய்தியாளர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அகில இந்திய ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் சேனலின் செய்தியாளர் அனூஜ் குமார், ஒரு கேமரா மேன் மற்றும் கால் டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட மூன்று பேர்,
நேற்றைய முன் தினம் செப். 8 அன்று ராய்காட்டில் உள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டிற்கு அருகே சென்றதாக கூறப்படுகிறது.
அங்கே பணியிலிருந்த காவலரிடம் பண்ணை வீட்டிற்கு செல்ல அவர்கள் வழிகேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கூறிய வழியில் அவர்கள் சென்றதாக தெரியவருகிறது.
இதற்கிடையில், வழி கூறிய அந்த காவலர் பணியிலிருந்த மற்ற போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் காரிலேயே திரும்பவும் அங்கு வந்த மூவரும், தவறாக வழி கூறியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களை சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் 3 பேர் மீதும் விதிமீறலில் ஈடுபட்டதாக, 4 நாட்கள் காவலில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் அர்னாப் கோஸ்வாமியின் ரீ பப்ளிக் செய்தி தொலைக்காட்சியில், உத்தவ் தாக்கரே மீது கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறது.