சமூக வலைத்தளத்தில் வைரல் வீடியோ! பிரபல நடிகர் செய்த செயல்!
நடிகர் அஜித் என்றாலே பலருக்கும் பிடித்த நடிகர் தான் என்பார்கள். அதிலும் அவரது விடாமுயற்சியாலே மக்களை அவர் அதிகம் கவரப்படுகிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், ஒரு மோட்டார் மெக்கானிக்காக இருந்து படிப்படியாக சினிமாவில் உயர்ந்தவர். மேலும் அவர் ஒரு கார் பந்தய வீரர் மற்றும் பைக் பந்தயங்களில் விரும்பி கலந்து கொள்வார்.
இவருக்கு பல முறை அதன் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றை தொடர்ந்து மேற்கொண்டு செய்து வந்தார். மேலும் அதை பலருக்கும் கற்று கொடுத்துக் கொண்டும் இருக்கிறார். அதனை தொடர்ந்து சிறு விமானங்களை தயாரிக்கும் பயிற்சிகளையும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.
அதே போல் அவருக்கு தெரிந்து அவருடன் உடன் பணியாற்றுபவர்கள் யாரும் கஷ்டத்தில் இருப்பது இவருக்கு தெரிந்தால், இவர் தான் உதவி செய்தது என்று அவருக்கே தெரியாமல் உதவி புரிவார் என்றும் சொல்கின்றனர். தற்போது இவரது அடுத்த படமான வலிமை வெளியாவதற்கு இவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த காத்திருப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் டெல்லியில் துப்பாக்கி சுடும் வீடியோ வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் நடிகர் அஜித் கார், பைக், ஏரோ மாடலிங் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். கடந்த 2019 ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது சென்னை துப்பாக்கி பயிற்சி அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க கருப்பு நிற ஆடை அணிந்துள்ள இவர், அதில் அவர் இலக்கை குறிவைத்து சுடுவதை அதில் காண முடிகிறது. இந்த வீடியோவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/i/status/1425641762752655363