தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

0
96

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.இந்திய மக்கள் அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் முலம் உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதல் பிரிவின் தர வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்து புதிய இமயத்தைத் தொட்டிருக்கிறார் நீரஜ் சோப்ரா.

24 வயதான இவர் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர்.இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆபிஸர் ரேங்கில் பணியாற்றி வருகிறார்.அண்டர் 20 ஆட்டங்கள் தொடங்கி 2014ல் இருந்தே இந்தியாவிற்காக தேசிய அளவிலான போட்டிகளில் நீரஜ் சோப்ரா ஆடி வருகிறார்.

2016 உலக அண்டர் 20 சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றார்.இந்த போட்டியிலேயே 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய அண்டர் 20 உலக சாதனையை நீரஜ் படைத்தார். இந்தியாவிற்காக அண்டர் 20 தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் இவர்தான்.தேசிய அளவில் ஈட்டி எறிதலில் ரெக்கார்ட் வைத்து இருக்கும் வீரரும் இவர்தான்.88.07மீ என்ற ரெக்கார்ட் தேசிய அளவில் இவர் வசம் உள்ளது.

இதற்கு முன் 2018 ஆசிய போட்டியில் 88.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இவர் தங்கம் வென்றார்.அதே வருடம் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார்.இந்தியாவிற்காக 2018 ஆசிய போட்டிகளில் தேசிய கொடி ஏந்தி சென்று இருக்கிறார்.ஈட்டி எறிதல் பிரிவில் உலக தர வரிசையில் இரண்டாவது இடம் பிடித்த முதல் இந்தியர் இவர்தான்.இந்த சாதனையின் முலம் இந்தியா தடகள விளையாட்டில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

author avatar
Parthipan K