நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வெகுவிமர்சையாக நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது.ஏழு மணிக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.அந்தந்த மையங்களிலும் துணை ராணுவ படை மற்றும் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அரசியல் கட்சி பிரமுகர்களும் இந்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியை சார்ந்தவர்களுக்கும், ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது இனிவரும் காலங்களில் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற வாக்கு எண்ணும் மையங்களில் இரவு பகல் பாராமல் சுழற்சிமுறையில் கூட்டணி கட்சி தொண்டர்களும், நம்முடைய கட்சி தொண்டர்களும் மற்றும் நிர்வாகிகளும் கண்காணித்து வரவேண்டும் என்று தெரிவித்தார்.இதே கோரிக்கையை முதல்வரும் துணை முதல்வரும், தங்கள் கட்சி தொண்டர்களும், கூட்டணிக்கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு உருவானதுதான் விராலிமலை சட்டசபை தொகுதி கடந்த இரண்டு தேர்தல்களிலும் இத்தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாவது முறையாக இந்த தேர்தலிலும் அவர் அந்த தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார்.இந்தநிலையில், விராலிமலை சட்டசபைத் தொகுதியில் மாத்தூர் பகுதியில் இருக்கின்ற 27வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி தரகர்களின் கையெழுத்துடன் கூடிய சீல் பேப்பர் 1 வாக்கு எண்ணும் மையத்தில் கிடைத்திருக்கின்றது இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள்.
அதோடு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு இருக்குமோ என்று சந்தேகம் அடைந்த அவர்கள் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்திருந்தனர் இதுதொடர்பாக விளக்கம் கொடுத்த மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடியில் தரகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அந்த சமயத்தில் விவிபேட் கருவியில் இருந்து சேகரிக்கப்படும் வாக்குச்சீட்டுகளை ஒரு கவருக்குள் வைத்து அதன் மீது ஏஜென்ட்கள் கையெழுத்துடன் கூடிய பேப்பர் சுற்றப்பட்டு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதோடு இந்த பேப்பர் இங்கே தவறுதலாக கிடைத்திருக்கிறது இதற்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் இதனை ஏற்க மறுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் எதிர்க்கட்சியான திமுகவினர் உடனடியாக வாக்கு இயந்திரங்கள் இருக்கும் அறைக்கு சென்று அவரிடம் வாக்குப்பதிவு இயந்திரங்களை காட்டிய பின்னர் தான் சமாதானம் ஆகி இருக்கிறார்கள்.