கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி!

0
235

கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயம் காரணமாக அவர் விளையாட மாட்டார் என்று காலை முதல் தகவல்கள் வெளியாகின. எனினும் இறுதி முடிவு போட்டி நடக்கும் அன்று காலை (இங்கிலாந்து) எடுக்கும் தேர்வுகள் மூலம் தெரியவரும் என சொல்லப்பட்டது. அதையடுத்து தற்போது அவர் காயத்தில் இருந்து குணமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள போட்டியில் கோஹ்லி விளையாடுவார் என கடைசி கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Previous articleவிக்ரம் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாராட்டிய ‘பிரேமம்’ இயக்குனர்!
Next articleபள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here