cricket: 10 ஆண்டுகளுக்கு பின் தரவரிசை பட்டியலில் டாப் 20 க்கு கீழே தள்ளப்பட்டார்.
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 22 இடத்திற்கு தள்ளப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளில் முதல் 20 இடங்களுக்கு பின் தள்ளப்பட்டார். 2014 ஆம் ஆண்டிலிருந்து அவர் டாப் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்.
தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதற்கு முக்கிய காரணமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே ஆகும். விராட் கோலி 6 இன்னிங்ஸில் விளையாடி மொத்தமாக 93 ரன்கள் எடுத்திருந்தார்.
இருவரின் மோசமான ஆட்டத்தால் தொடரில் தோற்க முக்கிய காரணமாக இருந்தது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியா உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் அவர் சரியாக விளையாடாத பட்சத்தில் அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறபடுகிறது.
ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 14 வது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 22 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன், மூன்றாவது இடத்தில் ஹாரி ப்ரூக், நான்காவது இடத்தில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 17 வது இடத்தில் உள்ளார்.