Virat Kohli : ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி செய்த செயல் சர்ச்சையாக வெடித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு இருந்து வருகிறார். ரோகித் சர்மா சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுகள் சரிவர விளையாடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த விளையாட்டில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இளம் வீரர் கோன்ஸ்டாஸ் பொறுப்பேற்று ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தி வருகிறார்.
அவருக்கு 19 வயதுடைய இளம் வீரராக இருக்கும் இவர் சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த இவர் 52 பந்துகளில் அரைசதம் அடித்து அபார ஆட்ட திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு எதிராக இந்திய அணியில் இருந்து விராட் கோலி பந்துகளை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் கோன்ஸ்டாஸ் இடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
இது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். அதில், விராட் கோலி செய்து இருப்பது மிகவும் தவறான விஷயம். ஒரு தெருவில் கூட்ட நெரிசலில் நடக்கும் போது எதிரே வருபவர்களுக்கு வழி விட்டு ஒதுங்குவது வழக்கம்.அந்த செயலால் நாம் ஒன்றும் அவரை விட தாழ்ந்தவர்கள் அல்ல என்று கூறி இருக்கிறார்.
மேலும், கோன்ஸ்டாஸ் தன் கையில் பேட்டை எடுத்து பார்த்து கொண்டே நடந்து வந்தார் விராட் கோலி தனது கையில் இருந்த பந்தை பார்த்து கொண்டே வந்தார் இந்த நிலையில் இருவரும் மோதிக் கொண்டார்கள். மைதானத்தில் இரு வீரர்கள் மோதிக் கொள்வதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என கூறி இருக்கிறார்.