கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். நிதி தேவைக்கு ஏற்றபடி வந்து சேரும். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வேண்டாம்.
உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரிய வரும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் எந்த வித பிரச்சனையும் இன்றி அமைதியாக செயல்படும்.
உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்