கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

0
140
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்ப உறவுகளின் சிறு சிறு மன கசப்புகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. அமைதியா இருங்க அது ரொம்ப நல்லது கணவன் மனைவி பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

வருமானம் வருவதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் செயல்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கல்வியில் கவனமாக பயில்வது நல்லது. மூத்த வயது சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

author avatar
CineDesk