கன்னி ராசி – இன்றைய ராசிபலன் !! நிதானமாக செயல்பட வேண்டிய நாள்!

0
80
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன் !! நிதானமாக செயல்பட வேண்டிய நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்குள்ளே சந்திரன் இருப்பதால் பரபரப்பு காணப்படுவதால் பொறுமையாக செயல்படுவது நல்லது.

கணவன் மனைவி ஒற்றுமை சில நேரங்களில் பாதிக்கப்படும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனக்கிலேசம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் பகைமை பாராட்ட வேண்டாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேதியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani