கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!!அற்புதமான நாளாக இருக்கும்!

0
86
Virgo – Today's Horoscope!! It's going to be a wonderful day!
Virgo – Today's Horoscope!! It's going to be a wonderful day!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!!அற்புதமான நாளாக இருக்கும்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். அடி தூள் கிளப்பும் நாள் எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்யுங்கள் வெற்றி பெறுங்கள். குடும்ப உறவு என்று அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியே புரிதல் உணர்வு மேம்படும்.

வாழ்க்கைத் துணைவி உறவினர்கள் நல்ல தகவல்களை தொலைபேசி மூலம் சொல்வார்கள். பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களிடையே நல்ல செல்வாக்கு பெறுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்ப்பாராத பண வரவு ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதைக் கண்டு மனமகிழ்ந்து போவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய சூழ்நிலைகள் நன்றாக உள்ளது. மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி மணமகிழ்ச்சி அடைவார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடையை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk