கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!
கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமாக செயல்படுவீர்கள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.
பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் வந்த சேர்வதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும்.
அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமையாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பம் குறையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலை மறைந்து இன்பமான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.