கன்னி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் வெளிப்படும் நாள்!!

0
188
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் வெளிப்படும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் வெளிப்படும் நாள். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மலரும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் உங்களுக்கு கண்கூடாக தெரியவரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில சலுகைகளை அறிவிப்பீர்கள் அதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக செல்லும்.

மாணவ மாணவிகள் கல்வியில் சீராக செயல்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு தைரியம் மிகுந்து மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களில் கவனம் மேற்கொள்வதால் செல்வ செழிப்பாக காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். அரசு வழி காரியங்களில் இருந்து வந்த இன்னல்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடன் பிறப்புகள் இல்லத்திற்கு வருகை புரிவதால் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் தைரியம் மிகுந்து காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleமக்களே எச்சரிக்கை! உருளைக்கிழங்கை இவ்வாறு சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!