கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
179

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சிலருக்கு இல்லத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை மிக அற்புதமாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு புது முயற்சி வெற்றி அடையும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் ஆகிய ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலை நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!
Next articleதுலாம்! இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here