குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 விருச்சிகம்
மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 ல் வக்கிரம் ஆகி, 18 – 10 2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
அதேபோல் கடந்த 23-5-2021 ல் மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான், 11-10-2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.
அந்த வகையில், விருச்சிக ராசிக்கு நான்காம் இடமான கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுள்ள குரு தற்போது வக்கிரம் அடைந்துள்ளார்.
பொதுவாக, நான்காம் இடத்தில் இருக்கும் குரு பகவான் நல்ல பலன்களை தர மாட்டார். ஆனால், நான்காம் இடத்தில் வக்கிரம் அடையும் குரு பகவான் நிச்சயம் நல்ல பலன்களை தருவார்.
வீட்டில் இருந்த இறுக்கமான சூழல் அகன்று மனதுக்கு மகிழ்ச்சி தரும் சூழல் அமையும்.
இதுவரை வீட்டுக்கு வாங்க முடியாமல் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் இனி வந்து சேரும்.
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் மெல்ல மெல்ல குறையும். மனதில் குடிகொண்ட விரக்தி மாறத் தொடங்கும்.
குருவின் ஐந்தாம் பார்வை, ராசியின் எட்டாம் இடத்திற்கு கிடைப்பதால், இதுவரை இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண வருவாய் தடையின்றி கிடைக்கும்.
பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கங்கள் மாறி, பிரச்சினை இன்றி பாகப்பிரிவினைகள் நடக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் சொத்துக்களும், பணமும் கிடைக்கும்.
இதுவரை சேமிக்க முடியாமல் இருந்தவர்கள், இனி சேமிக்க தொடங்குவார்கள். சிலருக்கு புதிய தொழிலில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
குருவின் ஏழாம் பார்வை, ராசிக்கு பத்தாம் இடத்திற்கு கிடைப்பதால், இதுவரை வேலை மற்றும் தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். புதிய வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாகும். முடங்கி போன தொழில்கள் மீண்டும் நல்ல முறையில் தொடங்கும்.
குருவின் ஒன்பதாம் பார்வை, ராசிக்கு பனிரண்டாம் இடத்திற்கு கிடைப்பதால், ருசியான உணவு உண்ணமுடியாமல் தவித்தவர்கள், இரவில் சரியாக உறக்கம் இல்லாமல் தவித்தவர்கள் அனைவரும் இனி, ருசியான உணவுகளை அருந்தி நிம்மதியாக உறங்குவார்கள்.
தடைபட்ட நீண்ட தூர பயணங்கள் இடையூறு இன்றி நல்ல முறையில் அமையும். வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மூலம் வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளும், பண வருவாயும் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.
வக்கிர குருவை போல, வக்கிர சனியின் பலன்களை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
அதன்படி, விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்த சனி ஓரளவு நல்ல பலன்களையே வழங்கி இருப்பார். ஒரு வேலை சனியால் கிடைக்க கூடிய பலன்கள் தடைபட்டு இருந்தால், அது சனியின் வக்கிர காலத்தில் நிறைவேறும்.
மூன்றாம் இடத்து சனி நன்மைகளே செய்வார் என்றாலும், ஜென்மத்தில் இருக்கும் கேது, விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து விரக்தியை கொடுத்துக்கொண்டே இருப்பார். அதனால், சனி பகவான் நல்ல பலன்களை தந்தாரா? தரவில்லையா என்ற குழப்பம் சிலருக்கு ஏற்பட்டு இருக்கும்.
எனினும், மூன்றாம் இடத்தில் வக்கிரம் அடைந்துள்ள சனி, தடைபட்ட முயற்சிகளை மீண்டும் தொடங்கி வைப்பார். நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்பந்தங்களை மீண்டும் செயல்படுத்துவார். புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி தருவார்.
சனியின் ஏழாம் பார்வை, ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு கிடைப்பதால், இதுவரை மனநிறைவு இல்லாமல் பணியாற்றிக்கொண்டு இருந்தவர்கள், இனி மன நிறைவுடன் பணியாற்றுவார்கள். கஷ்டப்பட்டு செய்த வேலைகளை எல்லாம் இனி இஷ்டப்பட்டு செய்வார்கள். பல விஷயங்களில் மன நிறைவு கிடைக்கும்.
சனியின் பத்தாம் பார்வை, ராசிக்கு பனிரண்டாம் இடத்திற்கு கிடைப்பதால், இதுவரை நேரம் காலம் இல்லாமல், தேவையற்று அலைந்து திரிந்தவர்கள், இனி பயணம் மற்றும் வேலை திட்டங்களை திறம்பட வகுத்து செயல்படுவார்கள்.
தடைபட்ட வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் அமையும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாட்டு வருவாயும் கிடைக்கும்.
ஏழாம் இடத்தில் இருக்கும் ராகு, வாழ்க்கை துணையின் மூலம் உங்களுக்கு தைரியத்தையும், மன உறுதியையும் கொடுப்பார். அதேபோல், நண்பர்கள் தரப்பில் இருந்தும், நம்பிக்கை கிடைக்கும்.
எனினும், ஜென்மத்தில் இருக்கும் கேது, பல நேரங்களில் விரக்தியான மனநிலையை கொடுப்பார். ராகு கேது பெயர்ச்சிக்கு பின், இந்த நிலை மாறும் என்பதால், மனதில் தேவை இல்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
இதுவரை, கோச்சார குரு மற்றும் சனியால் பாதிப்புகளை சந்தித்து இருந்தால், அது வக்கிர குரு மற்றும் வக்கிர சனியால், முடிவுக்கு வரும். அதனால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.
எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மற்ற ராசிகள்:
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மேஷம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 ரிஷபம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மிதுனம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கடகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 சிம்மம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கன்னி
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 துலாம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 தனுசு
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மகரம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கும்பம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மீனம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4