ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விருமன்… எந்த நாட்டில் தெரியுமா?

0
198

ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விருமன்… எந்த நாட்டில் தெரியுமா?

விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நாளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டுக்கு இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. விருமன் திரைப்படத்தை அடுத்து கார்த்திக்கு பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் விருமன் திரைப்படம் வெளியாகும் நிலையில் அமெரிக்காவில் மட்டும் ஒருநாள் முன்னதாகவே ஆகஸ்ட் 11 ஆம் தேதியே பிரீமியர் ஆகிறது. இதை அமெரிக்காவில் வெளியிடும் விநியோக நிறுவனமான ப்ரைம் மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடைசியாக இது போல விக்ரம் படத்துக்கு பிரீமியர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleடெண்டர் முறைகேடு! எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடத்தும் உச்சநீதிமன்றம்!
Next article டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!