“எங்க அப்பாவ அடிச்ச ஒனக்கு மோதிரம்…” கார்த்தி, சூரியின் அலப்பறையான விருமன் Sneak peek

Photo of author

By Vinoth

“எங்க அப்பாவ அடிச்ச ஒனக்கு மோதிரம்…” கார்த்தி, சூரியின் அலப்பறையான விருமன் Sneak peek

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்துக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகிறது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்தது. வெளிநாட்டுக்கு இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவர், சூர்யா, கார்த்தி, அதிதி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்று படத்தின் டிரைலரும் வெளியானது.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டும் விதமாக படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் கார்த்தி தனது தந்தை பிரகாஷ் ராஜை அடித்த ஆர் கே சுரேஷுக்கு மோதிரம் போட்டு பாராட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியின் போது கார்த்தி மற்றும் சூரி ஆகியோட் சொலவடைகளை சொல்லி பிரகாஷ் ராஜை கலாய்க்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி இப்போது சமூகவலைதளங்களில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.