ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர்… நட்சத்திர அந்தஸ்துக்காக விருமன் படக்குழு செய்த காரியம்

0
204

ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர்… நட்சத்திர அந்தஸ்துக்காக விருமன் படக்குழு செய்த காரியம்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ள விருமன் திரைப்படத்தில் பாடகியாகவும் அறிமுகம் ஆகியுள்ளார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்தது. வெளிநாட்டுக்கு இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவர், சூர்யா, கார்த்தி, அதிதி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்று படத்தின் டிரைலரும் வெளியானது.

இந்நிலையில் படத்தில் அதிதி ஷங்கர், யுவனுடன் இணைந்து பாடியுள்ள ‘மதுரவீரன்’ என்ற பாடல் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. கிராமிய இசையோடு இருக்கும் இந்த பாடலை முதலில் பிரபல பாடகியான ராஜலட்சுமிதான் பாடி இருந்தாராம். ஆனால் பின்னர் கவன ஈர்ப்புக்காகவும், நட்சத்திர அந்தஸ்துக்காகவும், அவரது குரலை நீக்கிவிட்டு அதிதியைப் பாடவைத்துள்ளனர்.

இதனால் சம்மந்தப்பட்ட பாடகி ராஜலட்சுமி கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. சினிமா உலகில் இதெல்லாம் சாதாரணம் என்றாலும், திறமையான பாடகி ஒருவருக்கு இப்படி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபொன்னியின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கு தயாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்
Next articleமுதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்!