மாணவர்களுக்கான விசா ரத்து ! டிரம்ப் அதிரடி !

0
174

மாணவர்களுக்கான விசா ரத்து ! டிரம்ப் அதிரடி !

கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சினை நிலவி வரும் அமெரிக்கா, சீனா இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவை பகிரங்கமாக அமெரிக்கா எதிர்த்து வரும் நிலையில், அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டனில் செயல்பட்டு வரும் சீன தூதரகம் முடக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு பழிவாங்கும் விதமாக சீனாவும், வெங்டூ நகரில் இயங்கி வரும் அமெரிக்க தூதரகத்தை முடக்கியது. இரு நாட்டினின் இத்தகைய செயல்பாடுகள் பெரும் விரிசலை மேலும் அதிகரிக்க காரணமாக அமைந்திருக்கிறது.

சீனாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வரும் நிலையில் ,சுமார் 3.7 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்புகளை கற்றுக்கொள்ள விண்ணப்பித்த நிலையில், அவை அனைத்துமே அமெரிக்க நிறுவனம் நிராகரித்தது. மேலும் ஏற்கனவே அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வரும் சீன மாணவர்களில் ஆயிரம் பேரின் மீதுள்ள வீசுவும் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

Previous articleதமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!!
Next article13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here