மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

0
158

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

விஷால் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாதம் நடந்தது.  இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகினார். இந்நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் முடித்துக் கொடுக்க மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில கோடிகள் தயாரிப்பாளர் விஷாலிடம் இருந்து மிஷ்கின் வாங்கி உள்ளார்.

இதற்குக் காரணமாக மிஷ்கின் படத்தின் பட்ஜெட்டை தாறுமாறாக ஏற்றி விட்டதும், சைக்கோ படத்தின் வெற்றிக்குப் பின்னர் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் எனக் கேட்டதே என சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்பும் பேசி இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும் விஷாலே மீதிப் படத்தை இயக்கிக் கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதை உறுதி செய்துள்ள விஷால் ’ நானே அடுத்த ஆண்டு ஒரு படம் இயக்க இருந்தேன். அது விலங்குகள் சம்மந்தப்பட்ட படம் . ஆனால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் வாய்ப்பு எதிர்பாராத விதமாகக் கிடைத்திருக்கிறது. நான் விதியை நம்புவன். அதனால் அதன்படியே செல்கிறேன். இந்த படத்தை இயக்குவதில் உற்சாகமாக இருக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார். விஷால் தற்போது புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கும் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிகிறது.

Previous articleஇந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட்
Next articleரஜினியின் சிஏஏ கருத்துக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு: ஆச்சரிய தகவல்