“ஓரங்கட்டப்பட்ட உதயநிதி”.. கட்டாயம் தவெக அந்த இடத்தில் இருப்பேன்!! எனக்கு உரிமை உள்ளது – விஷால்!!     

Photo of author

By Vijay

“ஓரங்கட்டப்பட்ட உதயநிதி”.. கட்டாயம் தவெக அந்த இடத்தில் இருப்பேன்!! எனக்கு உரிமை உள்ளது – விஷால்!!     

Vijay

Vishal will definitely attend the conference

TVK: தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். அவர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியின் கொடியை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகம் செய்தார். ஆனால் இந்த கட்சியின் கொள்கைகள் குறித்தும் அக்கட்சியின் கொடியின் விளக்கத்தினையும் கூற வில்லை. இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் கொள்கைகளும், கட்சி கொடியின் விளக்கத்தையும் கூறுவதாக அறிக்கை வெளியிட்டனர்.

மேலும் இதன் முதல் மாநாடானது எந்த மாவட்டத்தில் நடத்துவது என்று பல ஆய்வுக்கு பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியின் சாலையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் அக்டோபர் 23ல்  நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் விழுப்புரம் மாவட்டத்தின் காவல்துறை கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த அறிக்கை கெடுபிடியின் காரணமாக  வருகின்ற 27ம் தேதி நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து அதற்கான வசதிகள் குறித்தும் மக்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷாலிடம் நீங்கள் தவெக மாநாட்டில் கலந்து கொள்வீர்களா? அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு நான் நிச்சயம் அழைப்பு வந்தால் கலந்து கொள்வேன் என்றும் அழைப்பு வரவில்லை என்றாலும் நானும் ஒரு சக மனிதன் எனக்கு ஓட்டுரிமை உண்டு மக்களில் ஒருவனாக அவர் கொள்கைகள் என்ன அவர் மக்களுக்கு என்ன செய்ய போகிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் கூட்டத்தில் ஒருவனாக ஒரு ஓரமாக நான் மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று பதிலளித்துள்ளார். மேலும் அவரும் கட்சியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு இது குறித்து இப்போது பதிலளிக்க முடியாது அவர் கொள்கைகள் என்ன என்று அவர் கூறட்டும் பிறகுதான் அதை பற்றி முடிவெடுக்க முடியும் என்றும் பதிலளித்துள்ளார்.