வைரலாகும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ போஸ்டர்! இரு வேடங்களில் நடித்துள்ளாரா?

0
129

வைரலாகும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ போஸ்டர்! இரு வேடங்களில் நடித்துள்ளாரா?

 

 

தமிழில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஷால் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் இவர் நடிப்பை தாண்டி தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராக உள்ளார்.கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி படங்களாக இவருக்கு அமையவில்லை.இதனால் தற்பொழுது வெற்றி படத்தை கொடுக்கும் கட்டாயத்தில் விஷால் இருக்கின்றார்.இந்நிலையில் தற்பொழுது இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மினி ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் விஷாலை தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா,செல்வராகவன்,

ரித்து வர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் இப்படம் செப்டம்பர்-15 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது.இந்நிலையில் நாட்டின் 77 வது சுதந்திர தினமான நேற்று ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

அதில் விஷால் இரு வேடங்களில் இருப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது.மேலும் விஷாலின் தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் இருப்பதினால் ‘மார்க் ஆண்டனி’ பட போஸ்டரை விஷால் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Previous articleமூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி… 
Next articleஅண்ணன் நான் இறங்கி வரவா..! 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ பாடல்!