பெண் போலீஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசிய விசிக மாவட்ட செயலாளர் கைது!!

Photo of author

By Vinoth

கோவை மாவட்டம் பொள்ளாச்சியுள்ள  ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர்  அசோக்குமார்(வயது 40) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடக்கிபாளையம் பிரிவில் மாற்று கட்சியினர் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசியுள்ளார்.

மேலும் அவரிடம் அசோக்குமார் தொடர்ந்து பேசும்போது கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் (சிருஷ்டி சிங்கை) என்று பாராமல் தகாத வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதனை அடுத்து இந்த சம்பத்தை பற்றி முறையாக பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் புகார் அளித்தார். மேலும் இந்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய போலீசார் தகாத வார்த்தை மற்றும் கொலை மிரட்டல் மேலும் பெண்ணை இழிவுப்படுத்துதல் என நான்கு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்தது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அசோக்குமாரை பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். இதைத்தொடர்ந்து போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.