கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங்
திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டு தராத வியாபாரியை தாக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இப்போதே விழா ஏற்பாடுகளில் பொதுமக்களும் இந்து அமைப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் சிவா என்பவர் மின்னணு சாதனங்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.
இவரது கடைக்கு சென்ற விஷ்வ ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணர் சிலை வைத்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டுள்ளனர். கடை உரிமையாளர் சிவா 300 ரூபாய் கொடுத்த நிலையில், அதனை ஏற்க மறுத்த அந்த அமைப்பைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்டோர் அந்த கடையின் உரிமையாளர் சிவாவை தாக்கியுள்ளனர்.
மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் 5 பேர்களின் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்து அமைப்பினரின் இந்த அராஜக செயலை கண்டித்து #BJPரவுடிசம் என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்ட பதிவுகள் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.