எதிர் வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பம் செய்யலாம் இன்றைய திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு திமுக சார்பாக போட்டியிட விருப்பம் இருப்பவர்கள் வரும் 17ஆம் தேதி அதாவது நாளை முதல் 24 ஆம் தேதி வரையில் தலைமை கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.
அதோடு பொது தொகுதியில் போட்டியிடுவதற்கான தொகை ரூபாய் 25 ஆயிரம், தனி தகுதிக்கு ரூபாய் 15,000 என்று விண்ணப்பக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். வேட்பாளராக போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள் கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளுடன் பகிர்ந்து அளிக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம் செய்து இருந்தால் அவர்களுடைய விண்ணப்ப கட்டணம் பிறகு திரும்ப கொடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரூபாய் 1000 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னரே அதிமுக சார்பில் விருப்ப மனு தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதிமுக பெற ஆரம்பிக்கும் நாளில் திமுகவின் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் முடிய உள்ளது.