போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு!
சேலம்- தருமபுரி மாவட்ட எல்லையில் மோரூர் என்ற பகுதி உள்ளது.இந்த பகுதியில் அதிமுக திமுக போன்ற கொடி கம்பம் நடுவதில் தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.இது அடிதடி வரை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.அதனால் ஊர் மக்களின் நலன் கருதி இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இனி அப்பகுதியில் கொடி கம்பங்கள் நடக்கூடாது என அந்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர்.அதனை காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு அந்த தீர்மானம் கொடுக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் ஏற்றுவதற்கு அனுமதி கேட்டனர்.மேலும் அந்த கொடியை ஏற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வருவதாகவும் கூறியிருந்தனர்.ஆனால் அங்கு எந்த கொடிகளும் ஏற்ற கூடாது என்ற தீர்மானம் வரையறுக்கப்பட்டதால் விசிக கட்சியினர் கொடி கம்பம் அமைப்பதற்கு அனுமதி மறுத்தனர்.
அனுமதி அளிக்க மறுத்ததால் விசிக தலைவர் திருமாவளவன் கொடி கம்பம் நடுவது ரத்து செய்யப்பட்டது.ஆனால் இன்று விசிக கட்சியை சேர்ந்த சிலர் அனுமதி மறுத்ததை மீறி கொடி கம்பம் நட முயற்சித்தனர்.இவ்வாறு தடையை மீறி கொடி கம்பம் நடப்படுகிறது என்று அங்குள்ள சிலர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தகவல் அளித்த ஓரிரு நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அங்கு வந்த போலீசார் விசிக கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசாருக்கும் விசிக கட்சியினருக்கும் பேச்சுவாரத்தை வாக்குவாதத்தில் முடிந்தது.இறுதியில் போலீசார் அங்குள்ள விசிக கொடி கம்பத்தை பிடுங்கி எடுத்தனர்.கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் விசிக கட்சியினர்,போலீசார் மீது கல்லடி தாக்குதல் நடத்தினர்.கல்லடி நடக்க தொடங்கியதும் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.பின்பு போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர விசிக கட்சியினர் மீது தடியடி நடத்தினர்.இரு தரப்பினரும் மோதி கொண்ட சம்பவம் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவிற்கு தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.அதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இரு தரப்பினருக்கிடையே மோதல் நடைபெற்றதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.