நயன்தாரா முதன்முதலில் மலையாளத்தில் ‘லோக்கல் டிவி சேனலில் ஆங்கரிங்’ வேலை செய்து வந்தவர். முதன்முதலாக சினிமாவில் ‘மனச்சிக்கரே’ என்ற மலையாளப் படத்தில் ‘இயக்குனர் சத்தியன்’ மூலம் அறிமுகமானவர். அதன் பின் தான் தமிழில் இயக்குனர் ஹரி மூலம் ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின்னர் பல படங்களில் நடித்து தன் திறமை மூலம் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். இவரது 75வது படமான ‘அன்னபூரணி’ எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்சமயம் ‘மண்ணாங்கட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணைகிறார் நயன்தாரா. இவரே இந்த படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது ‘ரவுடி பேபி பிச்சர்ஸ்’ மூலம் இப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ‘விஜய் சேதுபதியை’ அணுகியுள்ளார் இயக்குனர். விஜய் சேதுபதி ‘மகாராஜாவுக்கு’ பின் கமர்சியலில் நடிப்பாரா? என்ற சந்தேகமும் உள்ளது. இயக்குனர் ஹரி, நயன்தாரா, விஜய் சேதுபதி காமினேஷனில் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.