TVK: இவர் செய்வது நியாயமே இல்லை.. விஜய் வீட்டின் முன் கருப்பு கொடி ஏந்தப் போகும் தவெக தொண்டர்கள்!!

Photo of author

By Rupa

தமிழக அரசியல் களத்தில் விஜய் அடி எடுத்து வைத்தது முதல் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுக மற்றும் மத்திய அரசை எதிர்த்தது முதல் இது ஆரம்பமானது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது நடந்த முடிந்த எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார் நிகழ்ச்சிக்கு பிறகு பல தரப்பினரின் கருத்தை வெளிப்படைத் தன்மையுடன் பேசினார்.

திருமா கலந்து கொள்ளாததற்கு கட்டாயம் ஆளும் கட்சியின் அழுத்தம் அதுமட்டுமின்றி அவரது மனம் அனைத்தும் இங்கே தான் என கூறினார். இந்நிகழ்ச்சி நடந்து முடிந்து ஓரிரு தினங்களிலே ஆதவ் அர்ஜுனா தனியார் ஊடகத்திற்கு பிரத்தேயேக பேட்டி ஒன்று அளித்திருந்தார்.அதில் திருமா கலந்து கொள்ளாததற்கு எ வே வேலு தான் காரணமென உண்மையை போட்டுடைத்தார். முன்னதாகவே திருமா மீது விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் மேற்கொண்டு இவர் சொன்ன இந்த தகவலானது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது ஓர் பக்கம் இருக்க தனது மாநாட்டில் அவர்களே இவர்களே என்று பேச்சு இருக்க கூடாது என்று சொன்ன விஜய் எப்படி இந்த நிகழ்ச்சியில் மட்டும் அவர்களே இவர்களே என்ற மற்ற அரசியல் போன்று பேசலாம் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்த்து வந்தனர். மேற்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் புது பிரச்சனையானது விஷ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த 234 தொகுதிகளில் 2 மாவட்டம் என கணக்கெடுத்து அதற்கு ஒரு செயலாளர் என நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதில் தான் தற்பொழுது சர்ச்சை உண்டாகியுள்ளது. இந்த மாவட்ட செயலாளர்களை சொந்த மாவட்டத்தில் வேலை செய்பவர்களை தேர்தெடுக்காமல் அதே கிழக்கு தொகுதியில் இருப்பவபர்களை மேற்கிற்கும் அங்கு இருப்பவர்களை கிழக்கிற்கும் மாற்ற புஸ்ஸி ஆனந்த் முடிவெடுத்துள்ளாராம். இது கட்சி நிர்வாகிகளிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைவரிடம் சொல்லலாம் என நினைத்தாலும் விடுவதில்லை என்ற புகாரை முன் வைத்துள்ளனர்.

மேற்கொண்டு இந்த புது நடவடிக்கையானது செயல்படுத்தப்பட்டால் தற்போது வரை அந்த மாவட்ட ரீதியாக நாங்கள் செய்த அனைத்து செலவுகளும் வீணே எனக் கூறுகின்றனர் .  இதனால் இதுகுறித்து விஜய் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக திருச்சி தொண்டர்கள் பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு வலம் வந்துக் கொண்டிருக்கிறது .