சாணக்யா விருது வழங்கும் விழாவில் ரஜினியின் புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் தொண்டர்கள்

Photo of author

By Parthipan K

சாணக்யா விருது வழங்கும் விழாவில் ரஜினியின் புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் தொண்டர்கள்

நேற்றைய தினம் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனலின் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அதில் ரஜினிகாந்த் கூறியதாவது:
நான் கூறிய கருத்துகள் தேர்தல் நேரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக அரசியலில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அலை தமிழகத்தில் உருவாகிக்கொண்டே உள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலுக்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்டார். அவர் பொருளாளராக இருந்த போது ஏற்பட்ட பிரச்சனையால் வெளியே வந்து மக்கள் மன்றத்தில் தன் நியாயத்தை தெரிவித்தபோது மக்களிடம் அவர் ஒரு மிகப்பெரிய அலையை ஏற்படுத்தினார். அது தமிழக வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எல்லாருடைய அறிவுரையையும் கேட்பவர்கள் ஒருபோதும் உருப்பட முடியாது அதே சமயம் யாருடைய பேச்சையும் கேட்காதவர்களும் உருப்பட முடியாது. தமிழக அரசியலில் நிச்சயம் தேர்தல் நேரத்தில் நிச்சயம் அலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரங்கராஜ் பாண்டே நடத்நிய விழாவில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களுக்கு சாணக்யா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது அதனை நல்லக்கண்ணு அவர்கள் புறக்கணித்து விட்டார்.