கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது.
மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. நோய்த்தொற்று பரவலுக்கு இடையே இந்த தேர்தல் முடிவு வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் நோய்த் தொற்று பரவ காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழுதும் ஊரடங்கு உத்தரவு அன்றையதினம் பொருந்துமா என்ற கேள்வி எழ தொடங்கியது.
இப்படியான சூழ்நிலையில், மே மாதம் 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை என்று மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அன்று காலை எட்டு முப்பது மணி அளவில் தபால் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் சத்யபிரதா சாகு.
எப்பொழுதும் காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும். ஆனால் இந்த முறை சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்க இருக்கிறது. ஏனென்றால் காலை 8 மணி வரையில் தபால் வாக்குகள் பெறப்படும். அதன் காரணமாக, 8:30 மணி அளவில்தான் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
தபால் வாக்கு உடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என்ன ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த சத்யபிரதா சாகு இதுவரையில் எந்த ஒரு தவறும் நிகழவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.