உயிரிழந்தவரை ஓட்டு போடும்படி ஓட்டு ஸ்லீப் கொடுத்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வாக்கு பதிவு தொடங்கியது.மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்த நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஓட்டுகளை விருப்பமுள்ள வேட்பாளருக்கு போட்டுச் சென்றனர்.இந்த வாக்கு பதிவானது காலை 7 மணிக்கு தொடக்கி இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது.இந்த வருடம் ஆட்சியை பிடிக்க போவது யார் என்று பெரிய எதிர்பார்ப்புடன் மக்கள் அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர்.
அந்தவகையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பதிலாக வேறொருவர் வாக்களித்து விடுவார்.அப்படத்தில் அது பெரும் சர்ச்சையை உண்டாக்கும்.அதுபோல சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தாம்பத் தெருவை சேர்ந்தவர் தான் விஜயா மற்றும் அவரது கணவர்.இவரது கணவர் சில காலம் முன் உயிரிழந்து விட்டார்.தற்போது அந்த பெண்மணி வாகளிப்பதர்காக நேற்று விருகம்பாக்கம் தொகுதி,காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்துவதற்காக சென்றுள்ளார்.
வாக்களிக்க சென்றவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.பின்னர் அந்த பெண்மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது, நான் மற்றும் எனது கணவர் கடைசியாக 2019 ஆண்டு இங்கு வந்து வாக்களித்தோம்.அதன்பின் என் கணவர் காலமாகிவிட்டார்.ஆனால் தற்போது உயிரிழந்த அவருக்கு வாக்கு உள்ளது,உயிரோடு இருக்கும் எனக்கு வாக்கு இல்லை என வாக்குச்சாவடியில் கூறிவிட்டார்கள்.
இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்றார்.உயிரிழந்த அவருக்கு மட்டும் எப்படி ஒட்டு உள்ளது தனக்கு என் இல்லை என்று அந்த பெண் குழம்பிபோய் நின்றார். அதன்பின் அந்த பெண்மணி செய்வதறியாது வாக்குச்சாவடியை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறினார்.அரசாங்கம் இவ்வாறு செய்யும் சிறு சிறு தவறுகளால் பல வாக்குகள் காலாவதியாகி போகின்றது.