சென்னையில் குறைந்த பெண்களின் வாக்கு சதவீதம்!

Photo of author

By Sakthi

கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் எந்தவிதமான வன்முறையும் எங்கும் நடைபெறாமல் அமைதியான முறையில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது.ஆனால் ஆங்காங்கே சில பிரச்சினைகள் எழுந்து பின்பு சமாதானம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டசபைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட அதிக அளவில் வாக்குகளைப் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதில் சென்னையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.சென்னையில் இருக்கின்ற 16 சட்டசபை தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 60.83சதவீத அளவிற்கும் பெண் வாக்காளர்கள் 57.44 சதவீத வாக்குகளையும் பதிவுசெய்து இருக்கிறார்கள் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்ந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்கேநகர் சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக ஆண் வாக்காளர்கள் 72.34 சதவீதமும் பெண் வாக்காளர்கள் 69. 76 சதவீதம் அளவிற்கு தங்களுடைய வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.வேளச்சேரி சட்டசபை தொகுதியில் ஆண்கள் 57 6 சதவீத அளவில்தான் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் அறுபது 2.17 சதவீத ஆண்கள் தான் வாக்களித்து இருக்கிறார்கள் என்ற நிலையில் 54 .8 சதவீத பெண்களே அந்த பகுதியில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் இருக்கின்ற 16 சட்டசபைத் தொகுதிகளில் தற்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 12.13 லட்சம் ஆண்கள் அதேபோல 11 புள்ளி 84 லட்சம் பெண்கள் உள்ளிட்டோர் வாக்களித்திருக்கிறார்கள். ஆனாலும் சென்னை மாவட்டத்தை பொருத்தவரையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் இருக்கிறார்கள். அதாவது 19.94 லட்சம் ஆண் வாக்காளர்களும் 20.61 லட்சம் பெண் வாக்காளர்களும் இருக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சென்னையில் இருக்கும் அனேக சட்டசபை தொகுதிகளில் ஆண் பெண் என்ற வாக்கு வித்தியாசம் மூன்று சதவீத அளவிற்குத்தான் இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் 7 சதவீத அளவிற்கு இந்த வித்தியாசமானது இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.