வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

0
191

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியிட்டு தேதியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தைத் திரையரங்குகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதில் ஒரு பாடலை சிம்புவும் மற்றொரு பாடலை ரஹ்மானும் பாடியுள்ளனர். இரண்டு பாடல்களையும் பாடல் ஆசிரியர் தாமரைதான் எழுதியுள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் இசை வெளியீடு தாமதம் ஆகி வந்த நிலையில் தற்போது வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி  பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடக்கும்  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அன்றே படத்தின் டிரைலரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
Next articleகொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…