தமிழகத்தில் கால் தடம் பதித்தது புதிய வகை நோய் தோற்று! ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது!

0
209

நைஜீரியாவில் இருந்து வழியாக சென்னை வந்த ஒருவருக்கு முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. இது புதிய வகை நோய் தொற்று பாதிப்பா என்பதை தெளிவுபடுத்துவதற்காக உடனடியாக அவருடைய மாதிரியை பெங்களூருவில் இருக்கின்ற ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கும் மரபியல் மாற்றம் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த ஏழு பேரும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த 8 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனே, பெங்களூரு, ஹைதராபாதில் இருக்கின்ற மத்திய அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் ஆய்வக முடிவுகள் எங்களுக்கு வந்திருக்கின்றன. இதில் நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் தமிழகத்தில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார். இதன் காரணமாக, அவருக்கு குறைவான பாதிப்பு உண்டாகி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய குடும்பத்தினர் 6 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என்று ஒட்டு மொத்தமாக 7பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு இருக்கின்றன. இவர்களுக்கு இருமல், சளி லேசான காய்ச்சல் உள்ளிட்டவை மட்டுமே இருக்கின்றன. அவர்களின் பரிசோதனையின் முடிவுக்காக காத்திருக்கின்றோம். அவர்கள் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்.

Previous articleலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! முன்னாள் அமைச்சரின் வீடுகளில் சிக்கியது என்ன?
Next articleவங்க கடல் பகுதிகள் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here