தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்! மக்கள் அவதி!
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் நிரந்தரமாக 60 பேரும் ஒப்பந்த அடிப்படையில் 99 பேர் என தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை.
அதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு செல்லாமல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக சின்னப்பார்க் முன்பு பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டம் பற்றி அவர்களிடம் கேட்ட போது நகராட்சி அதிகாரிகள் போனஸ் மற்றும் ஒரு மாத சம்பளத்தை வழங்கினால் மட்டுமே இந்த போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.மேலும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தேக்கம் அடைந்து காணப்படுகின்றது.
இதனால் மக்கள் அவரவர்களில் வீட்டிலும் பொது இடங்களிலும் குப்பை சேர்ந்து வருவதால் குப்பையை அப்புறப்படுத்தாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.