பொலிவான முகம் வேண்டுமா! அதற்கு இந்த பழம் மட்டும் தான் போதும்
பொலிவு இல்லாமல் இருக்கும் நம்முடைய முகத்தை பொலிவு பெறச் செய்வதற்கு ஒரே ஒரு பழத்தை பயன்படுத்தினால் போதும். அது என்ன பழம் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
பொலிவிழந்த நம்முடைய முகத்தை பொலிவு பெற வைக்க நாம் கிவி பழத்தை பயன்படுத்தலாம். கிவி பழத்தில் சருமத்திற்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கிவி பழத்தை நாம் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம் அதே சமயம் நாம் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் கிவி பழத்தை பயன்படுத்தலாம்.
கிவி பழம் பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழம் நமக்கு இனிப்புடன் கலந்த புளிப்புச் சுவையை கொடுக்கும். கிவி பழத்தில் விட்டமின் கே, விட்டமின் சி, விட்டமின் ஈ, போலட் அமிலம், ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவை உள்ளது.
கிவி பழத்தை நாம் சாப்பிடும் பொழுது செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகின்றது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. எலும்புகளுக்குத் தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கின்றது. கர்ப்பிணி பெண்கள் இந்த கிவி பழத்தை சாப்பிட அவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
மேலும் பல நன்மைகளை கொடுக்கும் கிவி பழத்தை நாம் சருமத்திற்கும் பயன்படுத்தலாம். சருமத்திற்கு கிவி பழத்தை பயன்படுத்தும் பொழுது முகம் பொலிவு பெறும். மேலும் முகப்பரு, கரும்புள்ளி, கருவளையம் போன்ற பல பிரச்சனைகள் சரியாகின்றது. இந்த கிவி பழத்தை முகத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
பயன்படுத்தும் முறை…
முதலில் ஒரு கிவி பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த இந்த விழுதை நாம் முகத்தில் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
தேய்த்த இந்த விழுதை நாம் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் 30 நிமிடம் கழிந்து முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி விடவேண்டும்.
இறுதியாக முகத்தை ஒரு துணியைக் கொண்டு துடைத்துவிட்டு பின்னர் ஏதேனும் ஒரு மாய்சுரைஸர் பயன்படுத்தினால் போதும். முகம் பொலிவாக மாறத் தொடங்கவும்.