முகத்தில் உள்ள முகப்பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா? வெந்தயக் கீரை பேஸ்ட் பயன்படுத்துங்க!
நம்முடைய முகத்தில் உள்ள முகப்பருக்கள் அனைத்தையும் மறைய வைக்க வெந்தயக் கீரையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக வெந்தையக் கீரை மருத்துவ குணம் கொண்ட மூலிகை கீரையாகும். வெந்தயக் கீரையை புற்றுநோயை தடுக்க பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் வெந்தயக் கீரையை நாம் சாப்பிட்டு வந்தால் இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் முடி வளர்ச்சிக்கும் இந்த வெந்தயக் கீரை உதவி செய்கின்றது.
தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் வெந்தயக் கீரை நல்ல பலன்களை தரும். அதே போல செரிமாணம் சரியாக நடக்கவில்லை என்றால் வெந்தயக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் செரிமாணம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.
வெந்தயக் கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. இந்த வெந்தயக்கிரையை பொரியலாகவும் கூட்டாகவும் மேலும் பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். தற்பொழுது வெந்தயக் கீரையை எவ்வாறு. முகப்பருக்களை மறையச் செய்ய பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
வெந்தயக் கீரையை முகப்பருவுக்கு எதிராக பயன்படுத்தும் முறை…
வெந்தயக்க கீரையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்சி ஜார் எடுத்து அதில் இந்த வெந்தயக்கீரையை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த வெந்தயக் கீரை பேஸ்ட்டை எடுத்து முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் மறையும்.