கவர்ந்து இழுக்கும் புருவம் வேண்டுமா? அப்போ இதை தினமும் FOLLOW பண்ணுங்க!

Photo of author

By Divya

கவர்ந்து இழுக்கும் புருவம் வேண்டுமா? அப்போ இதை தினமும் FOLLOW பண்ணுங்க!

Divya

Updated on:

Want eye-catching brows? So follow this daily!

உங்கள் அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.அதிலும் பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.முகத்தை அழகாக காட்டுவதில் உதடு,கண்களுக்கு அடுத்து புருவங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

ஆனால் எல்லோருக்கும் அழகான அடர்த்தியான கருமையான புருவம் இருப்பதில்லை.அழகிய புருவங்களை பெற இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க.

தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்

இந்த இரண்டு எண்ணையை சம அளவு எடுத்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இதை இரவில் உறங்கச் செல்வதற்கு முன் புருவங்களுக்கு அப்ளை செய்தால் புருவ முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்.

கற்றாழை ஜெல்
தேங்காய் எண்ணெய்

சந்தையில் விற்கும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டாம்.கற்றாழை செடியில் இருந்து பிரஸ் ஜெல் எடுத்து இதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.இதை புருவங்கள் மீது தடவி வந்தால் அழகான அடர்த்தியாக கண் புருவம் வளரும்.

வெந்தயம்
தேங்காய் எண்ணெய்

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து லேசாக வறுக்கவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து புருவங்களுக்கு அப்ளை செய்து வந்தால் புருவ முடி அடர்த்தியாக வளரும்.

வைட்டமின் ஈ மாத்திரை
தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் 20 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒரு வைட்டமின் ஈ கேப்சியூல் சேர்த்து புருவங்களுக்கு அப்ளை செய்தால் புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளரும்.

நல்லெண்ணெய்

தினமும் இரவு கண் புருவங்களுக்கு நல்லெண்ணெய் தடவி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் புருவ வளர்ச்சி நன்றாக இருக்கும்.