பால் போன்ற வெள்ளையான பற்கள் வேண்டுமா? அப்போ கிராம்பை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

பால் போன்ற வெள்ளையான பற்கள் வேண்டுமா? அப்போ கிராம்பை இப்படி பயன்படுத்துங்க!!
நம்முடைய பற்களில் உள்ள கரைகள் அனைத்தையும் நீக்கி பற்களை பளிச்சென்று பால் போன்று வெள்ளையாக மாற்ற கிராம்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பற்களை பராமரிக்கும் இயற்கையான மருந்து பொருட்களில் கிராம்பு சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றது. நமக்கு பல்வலி ஏற்பஞும் பொழுது கிராம்பு மருந்தாக பயன்படுகின்றது. கிராம்பில் ஆன்டிசெப்டிக் பண்புகள் அதிகம் காணப்படுகின்றது. இதனால் நாம் கிராம்பை சாதாரணமாக சாப்பிடும் பொழுது நம்முடைய வாயில் உள்ள கிருமிகள் அழியும். மேலும் வாயில் உள்ள துர்நாற்றமும் மறையும். இந்த கிராம்பை எவ்வாறு பற்களை வெள்ளையாக்க பயன்படுத்துவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* கிராம்பு
* ஆலிவ் ஆயில்
செய்முறை:
தேவையான அளவு கிராம்புகளை எடுத்து அதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பொடியில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பேஸ்ட் போல தயார் செய்து கெள்ள வேண்டும்.
பின்னர் இந்த பேஸ்டை கொண்டு பற்களை துலக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பற்கள் வெண்மையாக மாறும். வாயில் உள்ள துர்நாற்றம் வீசாது. மேலும் வாயில் உள்ள அனைத்து கிருமிகளும் அழிந்து விடும்.