பெரும்பாலான பெண்களின் முகத்தில் மங்கு அதாவது கருந்திட்டுகள் படிந்து அழகையே கெடுக்கிறது.இந்த மங்குவை இயற்கை பொருட்கள் கொண்டு மறைய வைப்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
தீர்வு 01:
1)அதிமதுரப் பொடி – ஒரு தேக்கரண்டி
2)நாட்டு மாட்டு பால் – ஒன்றரை தேக்கரண்டி
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அதிமதுரப் பொடி 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒன்றரை தேக்கரண்டி அளவு காய்ச்சாத நாட்டு மாட்டு பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ள வேண்டும்.இந்த அதிமதுரப் பேஸ்டை மங்கு மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.
தீர்வு 02:
1)ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)சந்தனப் பொடி – அரை தேக்கரண்டி
3)வேப்பங்கொழுந்து பொடி – ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் பொடி 50 கிராம்,சந்தனப் பொடி 50 கிராம் மற்றும் வேப்பங்கொழுந்து பொடி 50 கிராம் அளவிற்கு நாட்டு மருந்து கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி,அரை தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு வேப்பங்கோழுந்து பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்து அரை மணி நேரம் காயவிட வேண்டும்.இப்படி செய்தால் மங்கு மறைந்துவிடும்.
தீர்வு 03:
1)உருளைக்கிழங்கு – ஒன்று
2)தக்காளி – ஒன்று
சிறிய அளவில் உருளைக்கிழங்கு எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு சிறிய கனிந்த தக்காளி பழத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் தக்காளி துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இதை முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு மேல் காயவிடுங்கள்.பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள மங்கு மறைந்துவிடும்.
அதேபோல் வேப்பிலை,கற்றாழை துண்டுகளை ஒன்றாக மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து மங்கு மீது தடவினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.