அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ இந்த டிப்சை பாலோ பண்ணுங்கள்!
தலைமுடி உதிர்வதை நிறுத்த வாரத்திற்கு இரண்டு நாள் இதனை பயன்படுத்தினால் போதும் தலைமுடி உதிர்வதில் இருந்து தடுக்கலாம்.
தலைமுடி அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் மற்றும் தலைமுடியை பாதுகாக்கவும் செய்ய வேண்டிய முறைகள் அதனை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் காணலாம். தலைமுடியை கொட்டாதவாறு பாதுகாக்கும் மருந்தாக கடுகு எண்ணெய் பயன்படுகிறது.
இதை ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவங்களில் சிறந்த மருந்தாக உதவுகிறது. கடுகு எண்ணெயில் அதிகப்படியான விட்டமின் ஏ, கே நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. கடுகு எண்ணெயை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தெரிந்து வருவதன் காரணமாக நரை முடி வருவதை தடுக்க உதவுகிறது.
நம் தலைமுடியானது ஒரு சில காரணங்களால் முடியும் வேர்களுக்கு சரியான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால் முடி கொட்டுதல் ஏற்படுகிறது. இதனை தடுக்க கடுகு எண்ணெயை வேர்கள் வரை நன்றாக தேய்ப்பதன் மூலமாக ரத்த ஓட்டங்கள் அதிகரித்து முடி கொட்டுவதை பாதுகாத்துக் கொள்கிறது.
முடியின் பளபளப்பிற்கும் மற்றும் மிருதுவான தன்மைக்கும் இவை மிகவும் உதவிகரமாக உள்ளது. இவ்வித கடுகு எண்ணெயை எவ்வாறு தலைமுடிக்கு உபயோகப்படுத்தலாம் அதன் செய்முறைகளை பற்றி காணலாம்.
இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல், இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஆகிய இரண்டையும் நன்றாக கலக்கி தலை வேர்ப்பகுதி வரை பரவும் வரை நன்றாக தேய்த்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வருவதன் காரணமாக தலை முடி கொட்டுவது தலைமுடி பலவீனம் அடைவது போன்ற பிரச்சனைகளிலிருந்து முழுமையாக குணமடைய உதவுகிறது.
சிறிய வெங்காயச் சாறு இரண்டு ஸ்பூன், கடுகு எண்ணெய் இரண்டு ஸ்பூன் ஆகிய இரண்டையும் நன்றாக கலக்கி இதனை தலை வேர் முடி வரை தேய்த்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் காரணமாகவும் தலைமுடி கொட்டாதவாறு பாதுகாத்த கொள்ள உதவுகிறது.