வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இந்த தினங்களில் மட்டும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்!
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.அதனையடுத்து அவரவர்களின் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் அந்த பணியை மேற்கொண்டு திருத்தங்கள் அனைத்தும் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
மேலும் நடப்பாண்டில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பின்படி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.அவர்களின் 18வயது பூர்த்தியடைந்த பிறகு வாக்காளர் பட்டியலுடன் பெயர் சேர்க்கப்பட்டு ,வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்பதற்கு படிவம் 6பிஐ பூர்த்தி செய்து அளிக்கலாம்.நடப்பாண்டின் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியானது இன்று முதல் தொடங்கவுள்ளது.தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு பட்டியல் காலை பத்து மணியளவில் வெளியிடப்படும்.இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும்.
மேலும் இந்த ஒரு மாத காலக்கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம் ,முகவரியில் திருத்தம் ,புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு ஆகியவற்றுக்கான மனுக்களை அளிக்கலாம்.பணிக்கு செல்வோர்கள் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள வசதியாக இருக்கும் வகையில் இந்த மாதத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் பொழுது எந்தெந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை பதிவு செய்தார்களோ அங்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும். அந்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு முகாம்கள் வழங்கப்படும் மற்ற நாட்களில் அரசு அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலர்களை சந்தித்து விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.