குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? சதகுப்பை விதைகளை இப்படி செஞ்சு குடுங்க! 

Photo of author

By Sakthi

குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? சதகுப்பை விதைகளை இப்படி செஞ்சு குடுங்க!
பொதுவாக குழந்தைகளுக்கு ஜீரண சக்தி என்பது மிகவும் குறைவாகத் தான் இருக்கும். எனவே குழந்தைகளுக்கு எளிமையாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை தான் சாப்பிட கொடுப்பார்கள்.
அவ்வாறு எளிமையாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகள் கூட குழந்தைகளுக்கு எளிமையாக ஜீரணம் ஆகாது. எனவே குழந்தைகளுக்கு ஜீரணம் ஆக வேண்டும் என்று பெற்றவர்கள் தனியாக மருந்துகள் வாங்கிக் கொடுப்பார்கள். எனவே அந்த மருந்துக்கு இனி வேலை இருக்காது.
ஏனென்றால் சதக்குப்பை விதைகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளின் ஜீரண சக்தி அதிகரிக்கும். சதக்குப்பை விதைகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது இரத்த சோகை நோய் குறையும். மேலும் உடல் வலிமை பெறும். பெண்கள் சதக்குப்பை விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு இரத்தம் அதிகமாகும்.
மேலும் இந்த விதைகளை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு கபம் குறையும். இந்த விதைகளை குழந்தைகளுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* சதக்குப்பை விதைகள்
* சர்க்கரை
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த தண்ணீரில் சதக்குப்பை விதைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பை அனைத்து விட்டு இதை இறக்கி கொள்ளவும். பின்னர் ஒரு டம்ளர் எடுத்து அதில் இதை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஜீரண சக்தி அதிகரிக்கும்.