முகம் பளிச்சென்று மாற வேண்டுமா? அப்போ இப்படி ஸ்கிரப் பண்ணி பாருங்கள்!

Photo of author

By Rupa

முகம் பளிச்சென்று மாற வேண்டுமா? அப்போ இப்படி ஸ்கிரப் பண்ணி பாருங்கள்!
நம்முடைய முகம் சில சமயங்களில் பொலிவு இல்லாமல் இருக்கும். அதுக்கு காரணம் நம்முடைய உடல் சோர்வாக இருப்பது தான். மேலும் நாம் அதிகம் வெயிலில் சென்று வந்தாலும் முகம் பொலிவு இல்லாமல் இருக்கும். அது மட்டுமில்லாமல் நாம் மாறி மாறி முகத்திற்கு பயன்படுத்தப்படும் சோப் அல்லது கிரும் வகைகளினால் கூட முகம் பொலிவு இல்லாமல் காணப்படும். எனவே பொலிவு இல்லாமல் இருக்கும் முகத்தை பளிச்சென்று மாற்ற இந்த பதிவில் எளிமையான வைத்தியம் ஒன்று குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* காபி பொடி
* தயிர்
செய்முறை:
முதலில் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு காபி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த பவுலில் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்யவும். பின்னர் சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.